Tamilnadu

இந்தியாவிலேயே முதல்முறை... மின்னணு விளையாட்டு போட்டிகளை நடத்தி அசத்திய தமிழ்நாடு அரசு !

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் "e-Sports" பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி பரிசுத் தொகை வழங்கினார்.

முதலமைச்சர் கோப்பை 2025-ல் முதல்முறையாக இந்தியாவிலேயே மின்னணு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. போட்டியில் EA FC 25, Street Fighter 6, Pokémon Unite, BGMI, Valorant மற்றும் e-Chess போன்ற விளையாட்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 14 முதல் 45 வயதுக்குட்பட்ட 4,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற மாநில கோட்டில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இன்றைய தினம் EA FC 25,BGMI போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத்தொகையினை முதல் துணை முதலமைச்சர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய வெற்றி பெற்றவர்கள், "முதல்முறையாக மின்னணு போட்டிகளுக்கு அரசு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் காலங்களில் மின்னணு போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த பலர் கலந்து கொள்ள உறுதுணையாக அமையும். இதனை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி" என கூறினர்.

Also Read: பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்... யார் இந்த மர்வான் பர்ஹாட்டி !