Tamilnadu
”விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை - என்ன மாதிரியான கட்சி இது?” : சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!
த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்தும் சம்பவம் நிகழ்ந்ததும் த.வெ.க நிர்வாகிகள் தலைமறைவானது குறித்தும் நீதிபதி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கருணை காட்டவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கலவரம் நடைபெறுவதை போல நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள், என்ன மாதிரியான கட்சி இது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்காக காவல்துறை விதித்த ஒன்றிரண்டு நிபந்தனைகள் தவிர மற்ற நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம் என தெரிவித்தார். கரூரில் துயர சம்பவம் நடந்தவுடன் கட்சி தொண்டர்களை விட்டு விட்டு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தலைமறைவாகி விட்டார்கள்.
மற்ற கட்சியினர் எல்லாம் உதவிக்காக விரைந்த போது நிகழ்ச்சியை நடத்திய தவெகவினர் காணாமல் போனது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, தலைமைத்துவ பண்பே விஜய்க்கு இல்லை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு முன் ஜாமின் கோரும் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Also Read
-
அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் அரசு : பல்லுயிர் பாதுகாப்பில் சிறந்து விளக்கும் திராவிட மாடல் !
-
“தேசிய கைத்தறி கண்காட்சி 2025!” - 30% முதல் 50% வரை சிறப்புக் கழிவு! : எங்கு? எப்போது?
-
ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
-
கோவை மாநகரில் ‘தமிழ்நாடு உலகளாவிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாட்டில் (TNGSS) 2025!’ : முதலமைச்சர் அழைப்பு!
-
இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!