தமிழ்நாடு

இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50,752 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.10.2025) இராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 176 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 134 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு 426 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இராமேஸ்வரம், பரமக்குடி, கிளியூர், ஆனந்தூர், கீழதூவல், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, மேலக்கொடுமலூர், நயினார்கோவில், சாயல்குடி ஆகிய இடங்களில் 2 கோடியே 37 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் கிராம நிருவாக அலுவலர் குடியிருப்பு,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நயினார்கோவில், கோவிலாங்குளம், பரமக்குடி ஆகிய இடங்களில் 10 கோடியே 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சமூக நீதி விடுதிகள்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 9 கோடியே 92 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் நபார்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், தங்கச்சிமடம், எஸ்.கொடிக்குளம், நம்புதாளை, பெருங்குளம், தொருவளூர், கடலாடி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தொண்டி, ஏர்வாடி ஆகிய இடங்களில் கிளை நூலகங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வேதாளை, செம்படையார்குளம், எல்.கருங்குளம், இருவேலி ஆகிய இடங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள்,

தோட்டக்கலைத் துறை சார்பில், உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தென்னை நாற்றங்கால் பண்ணை மேம்படுத்தும் பணி,

நீர்வளத் துறை சார்பில், பரமக்குடி வட்டம், பி.கொடிக்குளம் ஊராட்சியில் உபரிநீர் கால்வாய் குறுக்கே பகிரணை அமைத்து 4 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் அகரம் கண்மாய்க்கு புதிய பாசன கால்வாய்,

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 39 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம், இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச் சந்தைகள் மற்றும் அறிவுசார் மையங்கள், 96 இலட்சம் ரூபாய் செலவில் மண்டபம் பேரூராட்சியில் எருமை தரவை ஊரணி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிகளில் பூங்காக்கள்,

கூட்டுறவுத் துறை சார்பில், செல்வநாயகபுரம் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை 61 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பல்நோக்கு சேவை மையங்கள்,

ஆதிராவிடர் நலத் துறை சார்பில், பழஞ்சிறை மற்றும் காட்டுபரமக்குடி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிகளில் 1 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள், ஆழ்துளைக் கிணறு,

நெடுஞ்சாலைத் துறை சார்பில், பார்த்திபனூர் – கமுதி சாலை முதல் பெரிய பிச்சைப்பனேந்தல் சாலை, முதலூர் சாலை, திருவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர் –அருப்புக்கோட்டை – திருச்சுழி – நரிக்குடி - பார்த்திபனூர் சாலை, தேவிப்பட்டினம் -நயினார்கோவில் பொட்டவயல் சாலை, முதுகுளத்தூர் - வீரசோழன் சாலை ஆகிய இடங்களில் 36 கோடியே 83 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள், முதுகுளத்தூர் – கமுதி சாலை, பார்த்திபனூர் – கமுதி – அருப்புக்கோட்டை சாலை வரையில் 56 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் புதிய சாலைகள்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், கஞ்சியேந்தல், வாழவந்தாள்புரம், வலங்காபுரி, வெங்கடேஷ்வரா காலனி, கூரியூர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள், வண்ணாண்குண்டு மற்றும் நைனாமரைக்கான் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள், வெள்ளாமரிச்சிக்கட்டி, லாந்தை, தலைத்தோப்பு, தெற்குத் தரவை, மருங்கூர், வலசை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பல்வேறு பணிகள் என 12 கோடியே 67 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் 54 முடிவுற்றப் பணிகள்,

என மொத்தம், 176 கோடியே 59 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவியர்களுக்கு சமூக நீதி விடுதிக் கட்டடம்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில், இராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லானி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி நயினார்கோவில், திருவாடானை, பரமக்குடி, போகலூர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42 கோடியே 86 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைக் கட்டடங்கள்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 7 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய உள்ளீடுருவி கதிரியக்க ஆய்வகக் கட்டடம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், திருவாடானையில் 2 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வட்ட செயல்முறை கிடங்கு கூடுதல் கட்டடம்,

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், வெளிப்பட்டிணத்தில் 11 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட துணை பதிவுத்துறை அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மங்களக்குடி மற்றும் பெருநாழி ஆகிய இடங்களில் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3 கோடியே 65 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் புனரமைக்கும் பணிகள், கமுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறை மற்றும் பணிமனை அமைக்கும் பணிகள்,

கூட்டுறவுத் துறை சார்பில், பாண்டிக்கண்மாய், சாம்பக்குளம், காமன்கோட்டை, அரியனேந்தல் ஆகிய இடங்களில் 1 கோடியே 29 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்கள்,

நீர்வளத் துறை சார்பில், 36 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சருகனி ஆற்றின் குறுக்கே புதிய அணை, போகலூர் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் களரி கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் புனரமைப்பு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் சிதிலமடைந்த கட்டுமானங்களை சீரமைக்கும் பணிகள், பார்த்திபனூர் மதகணை வலது பிரதான கால்வாய் நெடுகையில் தலைமதகு மற்றும் சட்டர்களை மறுசீரமைக்கும் பணிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், பரமக்குடியில் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 7 கோடியே 23 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கச்சிமடம், தாமரைக்குளம், கும்பரம், பட்டிணம்காத்தான் தொடக்கப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பூசேரி ஊராட்சியில் நியாயவிலைக் கட்டடம், நெடியமாணிக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம்,

என மொத்தம், 134 கோடியே 45 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

இராமநாதபுரம் - 150 புதிய திட்டப் பணிகள் : 50,752 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 17,095 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,

ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 150 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள்; 201 பயனாளிகளுக்கு பழங்குடியினர் குடும்ப உறுப்பினர் நல வாரிய அட்டை மற்றும் 1409 பயனாளிகளுக்கு வீட்டுமனை இ-பட்டாக்கள் என மொத்தம் 1760 பயனாளிகள்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 10,459 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம், பழுதடைந்த வீடுகள் சீரமைக்கும் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம், மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் நலன் திட்டம், மீனவர்களுக்கான வீடுகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள்,

தோட்டக்கலைத் துறை சார்பில், 224 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், ஒரு துளி நீரில் அதிக பயிர் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 242 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், சீர்மரபினர் உறுப்பினர் அட்டைகள், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 76 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள்,

கூட்டுறவுத் துறை சார்பில், 3,866 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மீன்வளக் கடன், சுய உதவிக் குழு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், தாட்கோ கடன், ஆதரவற்ற விதவைக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

தாட்கோ சார்பில், 50 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 1,409 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், 25 பயனாளிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டைகள்,

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 1,590 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்,

வேளாண் பொறியியல் துறை சார்பில், 180 பயனாளிகளுக்கு துணை வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், தனிப்பட்ட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சூரிய மின்வேலி, சூரிய ஒளி பம்புசெட், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

மகளிர் திட்டம் சார்பில், 3,740 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் வங்கிக் கடன்,

தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், 4,861 பயனாளிகளுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம், வீட்டுவசதி ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 44 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1,952 பயனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நலவாரிய உதவித் தொகைகள், திறன்பேசி, காதொலிக் கருவிகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், பெற்றோர் இருவர் அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடர் கல்வியை பெற்றிட நிதி ஆதரவுத் திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அன்புக் கரங்கள் திட்டம் ஆகியவற்றின் கீழ் 531 பயனாளிகளுக்கு உதவிகள்,

மீன் வளத் துறை சார்பில், 2,648 பயனாளிகளுக்கு கூண்டு மீன் வளர்ப்பு, அலைகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,

என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 426 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,752 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories