Tamilnadu
கோவை மற்றும் மதுரையில் IIT கல்லூரிகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் கோரிக்கை!
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் இயற்கை வனப்பகுதி குறைந்து வருவது குறித்தும் அதை சரிசெய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வனப்பகுதி பாதுகாப்பிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?
சிறுத்தை மற்றும் புலிகள் வாழ்விடங்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றிற்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் பற்றிய விவரங்கள் என்ன?
வனப்பகுதி மற்றும் புலிகள் பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டுள்ளதா? தமிழ்நாட்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) புதிய புலிகள் காப்பகங்களை உருவாக்க வைத்துள்ள திட்டம் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
கோவை மற்றும் மதுரையில் ஐஐடி கல்லூரிகள்
சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் மதுரையில் புதிய ஐஐடிகள் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சகத்திடம் திமுகவின் மக்களவை உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒருவேளை ஒன்றிய அரசுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லையென்றால் அதற்குரிய காரணத்தையும் கேட்டுள்ளனர். முறைசார் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் – நடவடிக்கை என்ன?
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!