தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி கூட்டணி கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் முதலமைச்சர், திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள், எம்.பிக்கள் உடனிருந்தனர்.

இதனிடையே, கூட்டணி கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியில், ”இன்று பிறந்தநாள் காணும் அருமை சகோதரர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும் பூரண உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும் பூரண உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதிப்புகள், குறிப்பாக கூட்டாட்சித் தன்மை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை பாதுகாக்கும் நமது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்ந்து இணைந்து முன்னெடுப்போம்.” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வாழ்த்து செய்தியில், “சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் உங்கள் தலைமையே இன்னும் பல சாதனைகளை உருவாக்கட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், “ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.  இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!

புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை 

விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை

மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு.

இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள். 

இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,”இன்று பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் அண்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமுவந்த இனிய வாழ்த்துகள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73வது பிறந்தநாள்… கூட்டணி கட்சியினர் வாழ்த்து மழையில் முதலமைச்சர்!

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காகவும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலன்களுக்காகவும் அரசியல் களத்தில் அயராது பாடாற்றி வருகிற 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' தலைவர் மற்றும் 'இந்தியா கூட்டணியின்' முன்னணி தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எமது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க பொதுச் செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில். “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தமிழ்நாட்டு  மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும், உறுதியான வழிநடத்தலும் உண்டாகட்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . 

ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுச் சென்றனர்.

banner

Related Stories

Related Stories