Tamilnadu

”சி.வி.சண்முகத்திற்கு இப்போதாவது அரசியல் தெளிவு பிறந்து இருக்கும்” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி!

தமிழ்நாடு அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகள் இந்த திட்டத்தின் மூலம் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொதுமக்கள் பாராட்டி, வாழ்த்தி வருகிறார்கள்.

இந்த பாராட்டை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுக 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை முறியடிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அரசியல் தலைவர்கள் பெயரில் திட்டங்கள் செயல்படுத்துவது நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகத்திற்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”சி.வி.சண்முகத்திற்கு இப்போதாவது அரசியல் தெளிவு பிறந்து இருக்கும் என நம்புகிறேன்.

ஜெயலலிதா பெயரை போட்டு பல திட்டங்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள். தற்போது அதை அதிமுகவினர் குறை சொல்கிறார்களா? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கே துரோகம் செய்கிற ஒட்டுமொத்த கூட்டமாகத்தான் அதிமுக கூடாரம் திகழ்கிறது. அதற்கு சி.வி.சண்முகம்உதாரணமாக இருக்கிறோர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை பார்த்து அதிமுகவிற்கு வயிற்றெரிச்சல். அவர்கள் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை. தற்போது செய்பவர்களையும் நிறுத்த பார்க்கிறார்கள். உச்சநீதிமன்றம் இதற்கு சரியா பதிலடி கொடுத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: அதிமுகவிற்கு சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம் - இனியாவது பழனிசாமி திருந்த வேண்டும் : ஆர்.எஸ்.பாரதி!