Tamilnadu
100க்கும் மேற்பட்ட கார்கள் திருட்டு... வெளிநாட்டுக்கு விற்பனை.. வடமாநில இளைஞரை கைது செய்த சென்னை போலீஸ் !
சென்னை அண்ணாநகர் கதிரவன் காலனி பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த ஜூலை மாதம் கோயம்பேட்டில் உள்ள டொயோட்டா ஷோரூமில் க்ளெச் பிலேட் சர்வீஸுக்காக தன்னுடைய சொகுசு காரை (பார்ச்சுனர்) விட்டிருந்தார். சர்வீஸ் சென்டரில் இருந்து காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து பார்க்கிங் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஜூன் 10ஆம் தேதி அதிகாலையில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் காரை திருடி சென்றுள்ளார். அஜய் ரத்தினம் காரை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி தேடி வந்தனர்.
இந்நிலையில் புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை கண்காணித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரியில் வாகனம் திருடுவதற்காக காத்திருந்த திருடனை மடக்கிப் பிடித்தனர். சென்னை அழைத்து வந்து போலீசார் கார் திருடிய நபரை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருடனின் பெயர் சட்டேந்திரசிங் ஷகாவாட் என்பதும் அவர் எம்பிஏ பட்டதாரி என்பதும் தெரிய வந்தது. அவருடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சொகுசு கார்களை மட்டுமே குறிவைத்து திருடி விற்பனை செய் செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் ஷோரூமில் விடப்படும் கார்களை நோட்டமிட்டு சர்வீஸ் சென்டரின் உள்ளே சென்று காரில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கார் எங்கு உள்ளது என்பதை கண்காணித்து யாரும் இல்லாத நேரத்தில் சொந்த மாநிலமான ராஜஸ்தான் கொண்டு சென்று அங்கிருந்து நேபால் பகுதியில் விற்பனை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இவர் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகாவில் 100க்கு மேற்பட்ட சொகுசு கார்களையும் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. கடந்த 20 வருடங்களாக கார் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் சொகுசு கார்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கார் திருட்டு வழக்கில் பின்புலத்தில் யாராவது உள்ளனர் என்பது குறித்தும் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் 150 க்கு மேற்பட்ட சொகுசு கார்களை திருடி வந்த ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சட்தேந்திர சிங் ஷிகாவாத்தை சென்னை திருமங்கலம் போலீசார் பாண்டிச்சேரி டொயோட்டா ஷோரூமில் கார் திருட காத்திருக்கும் போது கைது செய்தனர்.
Also Read
-
கோவிலில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை ? சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது கர்நாடக அரசு !
-
விமான விபத்து ஏற்பட காரணம் ஒன்றிய அரசின் அலட்சியமா? விமான போக்குவரத்து துறையில் அதிர்ச்சி... விவரம் என்ன?
-
பள்ளிக்கல்வித்துறையின் நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
-
பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் நம்பமாட்டார்கள்! : செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு!
-
திராவிட மாடலில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிர்க் கடன்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!