Tamilnadu
தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிதியுதவி !
கடலூர் மாவட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் லதாகுமாரி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15.06.2025) காலை சுமார் 11.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புவனகிரி வட்டம், சின்னக்குமட்டி கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த திருமதி.லதாகுமாரி (வயது 37) க/பெ.மணிவண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!