Tamilnadu
“மதவாத சக்திகளின் வளர்ச்சி தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது" - முதல்வருக்கு CPIM பொதுச்செயலாளர் வாழ்த்து!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி எனப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி சந்தித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது வருமாறு :
"நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. மதுரையில் நடைபெற்ற சிபிஐ (எம்) அகில இந்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அதற்கு முழு ஒத்துழைப்பை தந்ததுக்கு நன்றி.
மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினோம். திமுக தலைவரின் முயற்சியால், மதவாத சக்திகளின் வளர்ச்சி தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில், பாஜக - அதிமுக இடையே சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது.
அடுத்த ஆண்டு கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தோழர்களையும் நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் மிக வலுவான கட்சியாக திமுக உள்ளது. இந்தியாவில் பாஜகவால் மைனாரட்டி மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். வக்ஃப் வாரியத் திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்த்து வாக்களித்த அதிமுக, அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணியில் கைகோர்த்து கைகுலுக்கி கொள்கிறார்கள்.
10 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து அதில் வெற்றி கண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நடைபெற்ற சந்திப்பில் நாங்கள் தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. நானும் முதலமைச்சரும், பாஜக - அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி குறித்து விவாதித்தோம். பாஜக - அதிமுக கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை.
ஜனநாயக நோக்கமுடைய கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணியை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது. மேலும் இதில் சில பேர் இணைய வாய்ப்பிருக்கிறது. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான சிபிஐ (எம்) அரசு தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. மூன்றாவது முறையும் சிபிஐ (எம்) வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று எதிர்பார்க்கிறோம்." என்றார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!