ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களை குறிவைக்கும் பாஜக, அதில் தமிழ்நாட்டை முதலில் வைத்துள்ளது. தமிழ்நாடு எதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறதோ அதை அமல்படுத்த பாஜக துடிக்கிறது. அதோடு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ பணிகளுக்கான நிதி என்று தேவையான நிதியையும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
அண்மையில் கூட இந்தி திணிப்பு, குலக்கல்வி, சிறு பிள்ளைகளுக்கும் பொதுத்தேர்வு, கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், ரூ.2 ஆயிரம் கோடி கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பகிர்ந்தளித்தது.
இப்படியாக தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுடன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு அரசியல் விமர்சகர்கள் உள்பட பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் வஞ்சக பாஜகவுடன் துரோக அதிமுக கூட்டணி வைத்துள்ளது குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் இன்று (ஏப்.19) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்த துண்டு பிரசுரத்தில், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக இழைத்த துரோகங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது வருமாறு :
வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகப் பட்டியல்!
* நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரை பறித்தது.
* நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு
* சிறுபான்மை மக்களுக்கு எதிரான CAA சட்டத்திற்கு ஆதரவு
* மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு
* இஸ்லாமியர்களை இரண்டாம் தரவகுடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு.
இதுபோன்ற மேலும் பல்வேறு,
பாதகங்களுக்கு துணைபோன போன பழனிச்சாமி
* இந்தித் திணிப்பு நிதிப்பகிர்வில் பாரபட்சம் கல்விநிதி மறுப்பு
* தொகுதி மறுசீரமைப்பு
- என பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அடிமை அதிமுகவின் முகத்திரையைக் கிழித்து விரட்டி அடிப்போம்!
வஞ்சக பாஜக - துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம்!
#NEETதுரோகிADMK
இந்த பிரசுரங்களை திமுகவினர் மாநிலம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்தனர்.