Tamilnadu

"அரசு பள்ளியில் படித்த என்னை அமைச்சராக்கிய பெருமை முதலமைச்சரையே சேரும்"- அமைச்சர் கோவி.செழியன் நெகிழ்ச்சி

உதகை அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை பலர் சாதாரண வார்த்தையாக கருதினர். ஆனால் பல்கலைக்கழக விவகாரத்தில் முதலமைச்சர் வென்று காட்டிள்ளார். பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரு ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்ன? பல்கலைக்கழகங்களுக்குள் ஆளுநர் எந்த அளவிற்கு அதிகாரம் செலுத்தலாம்? கல்லூரிகளில் எந்த அளவிற்கு தலையிடலாம்? என்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே முதலமைசார் இந்தியவிலேயே முதல் முதலாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 2 மாத காலமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது தான் உயர் கல்வி அமைச்சராக நான் பொறுப்பேற்றேன். தொடர் முயற்சிக்கு பிறகு அனைத்து விசாரணைகளும் முடிந்து நீதி வெல்லும் என்பதற்கு ஏற்ப பல்கலைக்கழக விவாகரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற மகிழ்ச்சியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அளித்து இருக்கிறது.

அதனையடுத்து இனி துணை வேந்தர்களை முதலமைச்சரே நியமனம் செய்யலாம் என்ற தீர்ப்பு வந்துள்ளது. ஓலை குடிசையில் பிறந்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழை மாணவனாகிய என்னை உயர்கல்வித்துறை அமைச்சராக உயர்த்திய பெருமை முதலமைச்சர் மு.க . ஸ்டாலினுக்கு சேரும்"என்று கூறினார்.

Also Read: "திமுக இயக்கம் மேலும் மேலும் வலுவடைய அயராது உழைப்பேன்"- துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேட்டி !