தமிழ்நாடு

"திமுக இயக்கம் மேலும் மேலும் வலுவடைய அயராது உழைப்பேன்"- துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேட்டி !

"திமுக இயக்கம் மேலும் மேலும் வலுவடைய அயராது உழைப்பேன்"- துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கழகத் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திருச்சி சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கழகத்தைப் பொறுத்தவரை உழைப்புக்கு என்றைக்கும் அங்கீகாரம் உண்டு. இந்த நம்பிக்கை எல்லா காலத்திலும் இயக்கத்தில் இருக்கின்ற தோழர்களுக்கு உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த நாள் வரை எதையும் கேட்டு பெற்றதில்லை, தானாகவே பதவிகளை கலைஞர் எனக்கு தந்தார்.

"திமுக இயக்கம் மேலும் மேலும் வலுவடைய அயராது உழைப்பேன்"- துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேட்டி !

இப்போது முதலமைச்சரும் தந்துள்ளார். முதலமைச்சர் என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார். எனக்கு கொடுத்திருக்க கூடிய இந்த அங்கீகாரம் மூலம், மேலும் கடுமையாக இந்த இயக்கத்திற்கு உழைத்து இன்னும் பல தோழர்களை இணைத்து திமுகவை தவிர்க்க முடியாத சக்தியாக மேலும் வலுப்பெற வேண்டிய என்னுடைய கடமையை சிறப்பாக செய்வேன். திமுக தவிர்க்க முடியாத பெரியக்கம். அந்த இயக்கம் மேலும் மேலும் வலுவடைய அயராது உழைப்பேன்.

இதை ஒரு பொறுப்பாக கருதுகிறேன். பொறுப்பு வருகிற போது கடமைகளும் அதிகமாகிறது என்பதை நான் உணர்கிறேன். என்னை இந்த பதவியில் நியமித்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், கழக பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories