Tamilnadu
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் - முழு விவரம் இங்கே!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17 தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Also Read
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்... தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !
-
"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை - கமல்ஹாசன் பாராட்டு !
-
”எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு இதுதான் காரணம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
4 ஆண்டுகள் - 17 லட்சம் பேருக்கு பட்டா : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!