Tamilnadu
“இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 3.20 பேருக்கு சிகிச்சை!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 - காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 - காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 உயர்த்தி வழங்கும் ஆணையை வெளியிட்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.
தொடர்ந்து நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளர்களுக்கு பழக்கூடையை வழங்கி, நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் துறையில் பல்வேறு புதிய புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
மக்களைத் தேடி மருத்துவம், இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், புற்றுநோயை கண்டறிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய புதிய திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமில்லாமல் உலகின் வேறு எந்த நாட்டிலும் மக்களை தேடிச்சென்று சிகிச்சை வழங்குவது கிடையாது. ஆனால், 2021 ஆம் ஆண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய விபத்துகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விபத்துக்குள்ளானால் அவர்களிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ முதல் 48 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து உடனடியாக அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கியதற்கு பிறகு 3 லட்சத்து 20 ஆயிரத்து 264 பேர் விபத்துகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்காக செலவிட்டிருக்கக்கூடிய தொகை 279 கோடியே 77 லட்சத்து 32 ஆயிரத்து 120 ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 721 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!