Tamilnadu
வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம் : சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில்நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு: -
1.தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2.நில உரிமை உள்ள நலிவுற்ற மக்கள் பயன் பெறும் வகையில் தாமாக வீடுகட்டிக் கொள்ளும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
3.தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக நாவலூர் திட்டப்பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்படும்.
4.பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி கூடம் அமைக்கப்படும்.
5.தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் மேம்பாட்டிற்காக 2000 மகளிருக்கு சிறப்பு சுயதொழில் பயிற்சி வழங்கப்படும்.
6.ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் நல்லகவுண்டன்பாளையம் திட்டப்பகுதியில் கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7.தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
8.தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!