Tamilnadu
கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் : முன்னாள் பேரா.நிர்மலா தேவிக்கு சிறை தண்டனை அறிவிப்பு - விவரம் என்ன?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியாராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு (அதிமுக ஆட்சியில்) அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளை தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகளை பேசி அவர்களை தவறான பாதையில் வழிநடத்த முயன்றுள்ளார். அந்த மாணவிகளை அரசியல் உள்ளிட்ட துறைகளில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சூழலில் இவர், ஒரு மாணவியிடம் இதுகுறித்து பேசுவது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர் மீது 5 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஜாமீனும் பெற்று வெளியே வந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருக்காகத்தான் நிர்மலா தேவி இவ்வாறு செயல்பட்டதாகவும், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவாகரம் அப்போது பூதாகரமான நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இதுக்குறித்து CBCID நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில் நிர்மலா தேவிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு துணையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தற்போது குற்றவாளி நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!