அரசியல்

“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்? என பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர்கள் என பலருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. அதோடு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தொல்லை செய்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை பல மாதங்களாக விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் ஆந்திராவின் YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஸ்ரீனிவாசலூ ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரித்த பின்னர், அவரது மகன் ராகவா மகுந்தா ரெட்டி நடத்தும் பாலாஜி டிஸ்லரிஸ் நெல்லூர், டெல்லி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராகவா கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

இதனிடையே விசாரணையில் ராகவாவின் வாக்குமூலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரும் இருந்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தனர். இவரை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

ஒரு பக்கம், சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மறுபக்கம் பாஜகவில் சேருவதற்கு பேரம் பேசப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலேயே மணீஷ் கைது செய்யப்பட்டார். இவரைத்தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து 9 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை, அவர் நிராகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் தற்போது வரை இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் 2-ம் நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவால் கைது சட்ட விரோதமானது என்றும், அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

மேலும் இந்த முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்கள் இன்று பாஜகவிலும், பாஜக கூட்டணி கட்சியிலும் இணைந்திருப்பதையும் வேட்பாளராக போட்டியிடுவதையும் குறிப்பிட்ட வழக்கறிஞர் சிங்வி, குற்றவாளி தரப்பில் பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி இருப்பதையும் சுட்டி காட்டினார். தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளி ஜாமீன் பெற்று இருப்பதையும் தெரியப்படுத்தினார்.

கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் முடிந்ததையடுத்து, அமலாக்கத்துறை வாதத்திற்காக வழக்கு வெள்ளிக்கிழமைக்கு (May 3) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது பொதுத் தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?, வழக்கு தொடங்கிய ஓராண்டுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டது எதனால்? உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories