Tamilnadu

”பா.ஜ.க ஆட்சியின் முடிவுக்கான Countdown தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் மக்களவை தேர்தலில் முக்கிய பிரச்சனைகள் எவை என்பது குறித்து Lokniti CSDS ஆய்வு அமைப்பு மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

இதன் முடிவில், 27% பேர் வேலையின்மை முக்கிய பிரச்சனை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது என்றும் மக்கள் கூறியதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் Lokniti CSDS கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பா.ஜ.க ஆட்சியின் முடிவுக்கான Countdown தொடங்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், புகழ்பெற்ற Lokniti CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”CBI, IT, ED என்ற திரிசூலத்தை பயன்படுத்தி மிரட்டும் மோடி” : கி.வீரமணி விமர்சனம்!