தமிழ்நாடு

”CBI, IT, ED என்ற திரிசூலத்தை பயன்படுத்தி மிரட்டும் மோடி” : கி.வீரமணி விமர்சனம்!

10 ஆண்டுகளாக விசாரணை அமைப்புகளைவைத்து எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.க மிரட்டி வந்துள்ளது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

”CBI, IT, ED என்ற திரிசூலத்தை பயன்படுத்தி மிரட்டும் மோடி” : கி.வீரமணி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருபெரும்புதூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி. ஆர். பாலுவை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஆசிரியர் கி.வீரமணி, "தேர்தல் பத்திரமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் தேர்தலுக்காகவே பத்திரத்தைக் கொண்டு வந்து மோசடி செய்தவர்கள் பா.ஜ.கவினர். ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்திக் கொண்டு ஊழலிலேயே மெகா மகா ஊழல் மற்றும் இமாலய ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மோடி நடத்தி வருகிறாரே இதுதான் ரோடு ஷோவா? கொரோனா காலத்தில் பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றார்களே இது தான் பா.ஜ.கவின் ரோடு ஷோ,நீங்கள் ரோட் ஷோ எங்கே நடத்தினார்கள் என்று தெரியுமா?. 100 வருடத்திற்கு முன்பே நீதிக்கட்சி தொடங்கிய தியாகராயரில் தான். பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சியில் CBI,IT,ED என்ற திரிசூலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைப் பிரதமர் மோடி அச்சுறுத்தி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories