Tamilnadu
ஆற்றில் பெட்ரோல் ஊற்றி குதித்த யூடியூபர்: Views-காக அபாய செயலை செய்த இளைஞர்கள்: இறுதியில் நேர்ந்த சோகம்!
தற்போதுள்ள நவீன உலகில் பலரது கைகளிலும் மொபைல் போன்கள் உள்ளன. தொடர்ந்து இணையத்தின் அடுத்தடுத்த வளர்ச்சியால் Youtube, முகநூல், இன்ஸ்டா என பல ஆப்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. இதன் மூலம் பலரும் தங்களுக்கு என்று தனியாக கணக்கு தொடங்கி, அதை வைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது பலரும் Youtube சேனல் ஒன்றை தொடங்கி எளிதாக தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அதே போல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்தும் மகிழ்கின்றனர். இதனை சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிற வகையில் இருக்கும் சாகச வீடியோக்களையும் பதிவேற்றி வர்கின்றனர்.
அந்த வகையில் அண்மையில் Youtube சேனல் ஒன்றில் பயங்கர வீடியோ ஒன்று வெளியானது. அதாவது இளைஞர் ஒருவர் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி, அதில் நெருப்பை பற்ற வைத்து, அதன் மேல் குதித்து சாகசம் செய்கிறார். இவருடன் சில இளைஞர்களும் உள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் கண்டனங்களை வழுத்ததோடு இது குறித்து புகாரும் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர்கள் யார், வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது மதுரையில் உள்ள ஒரு ஆற்றில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது எப்போது எடுக்கப்பட்டது, வெளியிடப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் தொடர்ந்து விசாரிக்கையில், இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில், மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து விபரீதமாக வீடியோ எடுத்து பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதன்படி ரஞ்சித், பாலா மற்றும் அவரது நண்பர்கள் இசக்கி ராஜா, சிவகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!