உலகம்

லண்டன் TO சான் பிரான்சிஸ்கோ... 5 ஆயிரம் மைல் தாண்டி BREAK UP செய்த இளம்பெண்... காரணம் என்ன?

5000 மைல் தாண்டி டேட்டிங் செய்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் காதலை முறித்துக்கொண்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் TO சான் பிரான்சிஸ்கோ... 5 ஆயிரம் மைல் தாண்டி BREAK UP செய்த இளம்பெண்... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரிட்டனின் லண்டனை சேர்ந்தவர் கெய்லி கேஸில் (Kayleigh Castle). 5 வயதான இந்த பெண் அறிவுரையாளராக இருந்து வரும் நிலையில், TikTok பயனராக பிரபலமாக அறியப்படுகிறார். இந்த சூழலில் இவர் கடந்த ஆண்டு மெக்ஸிகோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பை பரிமாறிக்கொண்ட நிலையில், இவர்கள் நட்பு ஒரு வருடத்திற்கும் மேல் நீடித்துள்ளது. இதனால் இவர்கள் டேட்டிங் செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி தனது ஆண் நண்பரை சந்திக்க சுமார் 5 ஆயிரம் மைல் தாண்டி சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார். சுமார் 10 நாட்களாக டேட்டிங் செய்ய எண்ணிய இவர், அவருடன் நேரத்தை செலவழிக்க எண்ணியுள்ளார்.

லண்டன் TO சான் பிரான்சிஸ்கோ... 5 ஆயிரம் மைல் தாண்டி BREAK UP செய்த இளம்பெண்... காரணம் என்ன?

அப்படி சென்ற இவர், அவருடன் காதல் பாராட்ட முடியாது என்றும், மீண்டும் நண்பர்களாகவே பயணிக்கலாம் என்றும் முடிவெடுத்து வந்துள்ளார். இந்த பெண், அவரது ஆண் இருந்த அந்த 10 நாட்களும், இருவரும் பார்க், மால், ரோடு ட்ரிப் என பலவை மேற்கொண்டுள்ளனர். மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது அன்பையும் பரிமாறி கொண்டுள்ளனர்.

ஆனால் கெய்லியுடன் இருந்த பாதி நேரத்தில், அந்த நண்பர் மொபைல் போனையும், வேலையும் மட்டுமே செய்து கொண்டிருந்ததாகவும், இவருக்கு கவனத்தை கொடுக்கவில்லை என்றும், அதனால் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் மீண்டும் நட்பையே தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் மீண்டும் நண்பர்களாவே தங்கள் உறவை தொடங்க எண்ணியுள்ளனர்.

5000 மைல் தாண்டி டேட்டிங் செய்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் காதலை முறித்துக்கொண்டு, மீண்டும் நட்பை தொடர விரும்புவதாக கூறியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories