Tamilnadu
பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்ட 67 சிட்டிங் MPக்கள் : சூடுபிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களம்!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.கவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
இக்கூட்டணி உருவானதால் பா.ஜ.க பீதியில் உள்ளது. மேலும் இந்த கூட்டணியைச் சிதைக்கப் பல முயற்சிகளை பா.ஜ.க மேற்கொண்டது. இருந்தும் இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்துவதே குறிக்கோள் என்ற ஒற்றை கருத்துடன் உள்ளதால் இக்கூட்டணி வலுவாக உள்ளது.
மேலும் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தனது 2 வதுகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் 40 தொகுதிகளுக்குத் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். இப்படி வேகவேகமாக இந்தியா கூட்டணி தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது.
அதேநேரம் பா.ஜ.க கூட்டணி இன்னும் குழப்பத்திலேயே இருந்து வருகிறது. கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையிலும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இதில் 67 (21%) சிட்டிங் எம்.பிகளுக்கு பா.ஜ.க தலைமை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது. இதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்பிக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
டெல்லியில் 7 எம்.பிக்களில் 6 சிட்டிங் எம்.பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கர்நாடகாவில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல் மகாராஷ்டிராவில் 14 எம்பிக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய இணை அமைச்சர்கள் பாரதி பவார் உள்ளிட்ட 9 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல் முன்னாள் அமைச்சர்களான சதானந்த கவுடா, ரமேஷ் பொக்ரியால் ஆகியோருக்கும் சீட்டு வழங்கப்படவில்லை.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !