இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.கவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
,இக்கூட்டணி உருவானதால் பா.ஜ.க பீதியில் உள்ளது. மேலும் இந்த கூட்டணியைச் சிதைக்கப் பல முயற்சிகளை பா.ஜ.க மேற்கொண்டது. இருந்தும் இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்துவதே குறிக்கோள் என்ற ஒற்றை கருத்துடன் உள்ளதால் இக்கூட்டணி உலுவாக உள்ளது.
இதனால் பா.ஜ.க வாரிசு அரசியல் என்ற வெற்று முழக்கத்தைக் கையில் எடுத்துக் கூவி வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் :-
1. முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன் - அனுராக் தாக்கூர்
2. முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகன் - பி.ஒய் ராகவேந்திரா
3. முன்னாள் எம்எல்ஏ ரவி சுப்ரமணியத்தின் மருமகன் - தேஜஸ்வி சூர்யா
4. முன்னாள் அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் - பியூஷ் கோயல்
5. முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள் - ரக்ஷா கட்சே
6. முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் - பங்கஜா முண்டே
7. அமைச்சர் ராதா கிருஷ்ண விகே பாட்டீலின் மகன் - சுஜோய் விகே
8. எம்பி சஞ்சய் தோத்ரேவின் மகன் - அனூப் தோத்ரே
9. முன்னாள் எம்பி துக்காராம் சிருங்காரேயின் மகன் - சுதாகர்
10. முன்னாள் அமைச்சர் அர்ஜுன் துளசிராம் பவாரின் மருமகள் - பார்தி பவார்
11. எம்எல்ஏ விஜய் கவித்தின் மகள் - ஹீனா காவித்
12. எம்பி மோகன் டெல்கரின் மனைவி - கலாபென் டெல்கர்
13. முன்னாள் அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியாவின் மனைவி - பான்டோ கட்டாரியா.
இப்படி வாரிசுகளுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்துவிட்டு எதிர்க்கட்சிகளைப் பார்த்து, வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்று பா.ஜ.க எந்த முகத்தை வைத்துக் கூறுகிறது. நா கூசாமல் பொய் பேசும் இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகவா இருக்க போகிறது.