Tamilnadu

கனமழையிலும் சென்னையில் பாதிப்பில்லாமல் இயங்கும் போக்குவரத்து : அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு !

வழக்கமாக சென்னையின் மழை காலங்களில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர்தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். மேலும், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்குவதால் அந்த இடங்களில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும்.

இதனை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் உடனடி தாக்கங்கள் கடந்த மழை காலத்திலேயே உணரப்பட்டது. இந்த நிலையில் , தற்போது சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையின் சுரங்கபாதைகளில் தேங்கும் தண்ணீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதோடு சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றப்பட்டு. இங்கு பணிபுரிய சுழற்சி முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழை புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 4 அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 3 அலுவலர்கள், 3 செயற்பொறியாளர்கள் மற்றும் 54 இதர நிலையிலான அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறைகளின் அலுவலர்களும் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரையின் மூலம் கண்காணிக்கப்படுகிறதுசென்னையில் ஏற்படும் வெள்ளத்தை அளவீட "அடி" முறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் இந்த முறை சென்னையில் மழை காரணமாக பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

இது குறித்து விளக்கமளிக்கசென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்..தமிழ்நாடு முதல்வர் அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக நீர் தேங்கும் பெரும்பாலான இடங்களில் தொடர் மழையிலும் நீர் தேங்கவில்லை.

அதே போல் மழை நிவாரண முகாமிற்கான தேவை தற்பொழுது இல்லை.இருப்பினும் உணவு தயார் செய்யும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்தோம். எல்லா சுரங்கபாதைகளை கண்காணிக்கும் 22 இடங்களை கண்காணிக்கிறோம். எங்கும் நீர் தேங்கவில்லை.போக்குவரத்தும் பாதிப்பில்லை. மழை பெய்யும் போது மட்டும் நீரை அகற்றாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ந்து நீரை வெளியேற்ற தயார் நிலையில் உள்ளோம்.12 இடங்களில் மரங்கள் விழுந்ததாக புகார் பெறப்பட்டு அவையும் அகற்றப்பட்டது" எனக் கூறினார்.

Also Read: "அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து : முரசொலி தலையங்கம் !