Tamilnadu
சென்னையில் மீண்டும் வாடிக்கையாளர் கணக்கில் டெபாசிட்டான ரூ.753 கோடி.. தொடரும் வங்கிகளின் அலட்சியம்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணசேன். இவர் கோட்டாக் மஹேந்திரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1000த்தை நண்பர் ஒருவருக்குப் பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
பின்னர் அவருக்கு உங்களது வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே பதறியடித்து வங்கிக்குச் சென்றுள்ளார். இது குறித்து வங்கி மேலாளரிடம் கூறியுள்ளார். நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு அவரை வங்கியிலிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.
பின்னர் மீண்டும் அவரது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது சேமிப்பு இருப்புத் தொகை மட்டுமே காட்டியுள்ளது. இந்த சம்பவம் நடந்து அடுத்த ஒரே நாளில் மீண்டும் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ. 750 கோடி இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை சேர்ந்தவர் முஹம்மத் இத்ரீஸ், மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக கோட்டாக் மஹேந்திரா வங்கியில் வங்கியில் கணக்கு வைத்து பரிவர்த்தனைகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முகமதின் அலைப்பேசிக்கு வங்கியில் வந்த குறுஞ்செய்தியில் ரூ.750 கோடி பணம் இருப்பு உள்ளதாகவந்துள்ளது. இதைப்பார்த்து பதட்டம் அடைந்த அவர் இன்று வங்கியின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள் முறையாகப் பதில் கூறவில்லை. பின்னர் சில நிமிடங்கிலேயே அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இப்படி தவறுதலாக வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!