தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,773.67 கோடி செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 139 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 202 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலான 2559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 386 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு 1045 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் – வீரசோழபுரத்தில் 39.81 ஏக்கர் பரப்பளவில், 139 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மொத்தம் 2,85,111 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைத் தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம், வங்கி, தபால் அலுவலகம், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் (ATM), கூட்ட அரங்கம், மருந்தகம், பதிவேட்டு அறை, முதல் தளத்தில் வேளாண்மைத்துறை, வேளாண் சந்தைபடுத்துதல் மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை அலுவலகங்கள், கூட்ட அரங்கம், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மீன்வளத்துறை அலுவலகங்கள், கூட்ட அரங்கம்;

மூன்றாம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலகம், வருவாய் பிரிவு, கலந்தாய்வு அரங்கம், ஒளித்தோற்ற அரங்கம், நான்காம் தளத்தில் பதிவுத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, நில அளவை மற்றும் நில பதிவேட்டுத்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கி;

ஐந்தாம் தளத்தில் இணை மேலாளர் சுகாதாரத் துறை, முதன்மை கல்வி அலுவலகம், முதன்மை திட்ட அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் (மேல்நிலை), மாவட்ட கல்வி அலுவலகம் (நடுநிலை) உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்கள், கூட்ட அரங்கம், ஆறாம் தளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தொழிலாளர் உதவி ஆணையர். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம். மாவட்ட வழங்கல் அலுவலகம், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், மாவட்ட மேலாளர் தமிழ்நாடு சந்தைபடுத்துதல் கழகம் ஆகிய அலுவலகங்கள்;

ஏழாம் தளத்தில் சமுக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், மாவட்ட மேலாளர் - ஆதிதிராவிடர் விட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம். உதவி மேலாளர் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நகர் மற்றும் கிராம புற திட்டமிடல் இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் மற்றும் எட்டாம் தளத்தில் மின்தூக்கி அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தீயணைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் வீடுகள், பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அங்கன்வாடிக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கணினி ஆய்வகங்கள், ஊராட்சி செயலகக் கட்டடங்கள், இலங்கைவாழ் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள், பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள், பயணிகள் நிழற்குடைகள், நியாயவிலைக் கடைகள் என 100 கோடியே 80 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் 2,525 முடிவுற்றப் பணிகள்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், நாகலூரில் 56 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளிக் கட்டடம், நாகலூர் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்கள்;

உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ரிஷிவந்தியம், நாகலூர், புதுப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, அரியலூர், கச்சிராயப்பாளையம், சேந்தநாடு, திருப்பாலப்பந்தல், பழையனூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 25 கோடியே 11 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி கிணறுகள், நீர் உந்து குழாய், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி, மின் மோட்டார்கள், நீர் உந்து குழாய்கள் மற்றும் மின் மோட்டார் அறைகள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய நகராட்சிகள், பேரூராட்சிகள், கல்வராயன்மலை, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் என பல்வேறு இடங்களில் 7 கோடியே 19 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொது சுகாதார ஆய்வகக் கட்டடம்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், கள்ளக்குறிச்சியில் 1 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் 2 மெட்ரிக் டன்/மணிநேர திறன் கொண்ட விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகையுடன் கூடிய 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு, கள்ளக்குறிச்சியில் 3 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சங்கராபுரம் பேரூராட்சியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டடம்;

என மொத்தம், 341 கோடியே 77 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் 167 கோடியே 16 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பாதாளசாக்கடை கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், இயந்திர குழிகள் பராமரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 16 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 30 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள்;

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை 98 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்;

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், காட்டுவனஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவாளர்கள் பிரித்திவி இன்னர்வேர்ஸ் பி.லிட்., ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கான கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வீரசோழபுரம் ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநருக்கான புதிய குடியிருப்பு வளாகம் மற்றும் முகாம் அலுவலகக் கட்டடம், வாணாபுரம் ஊராட்சி பகண்டையில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், நைனார்பாளையம் மற்றும் பொரசப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலக்கசடு மேலாண்மை சுத்திகரிப்பு நிலையங்கள், பூண்டி, நல்லாத்தூர், அரியபெருமானூர், சோமண்டார்குடி, பாக்கம், அரியலூர், சொரையப்பட்டு, கரடி, சாங்கியம், சிறுளாப்பட்டு, பாண்டூர், எ.சாத்தனூர், பாலி ஆகிய ஊராட்சிகளில் 2 கோடியே 56 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பொற்படாக்குறிச்சி, சிறுமங்கலம், பெரியகொள்ளியூர், அரியந்தக்கா, மேல்விழி, பல்லகச்சேரி, நெடுமுடையான், வடமருதூர் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 3 கோடியே 19 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள், கணினி ஆய்வகக் கட்டடங்கள், கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் பல்வேறு இடங்களில் 73 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு உணவு தானிய கிடங்குகள், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடங்கள், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு சிறுபாலங்கள், 87 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 சமையல் கூடங்கள், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 30 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று உணவு தானியக் கிடங்குகள்;

தாட்கோ சார்பில், அரசம்பட்டு, பிடாகம், கொசப்பாடி, எடுத்தவாய்நத்தம் ஆகிய இடங்களில் 4 கோடியே 23 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம அறிவுசார் மையங்கள்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், வாணாபுரம் வட்டம் பகண்டையில் 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிளை நூலகக் கட்டடம்;

என மொத்தம், 386 கோடியே 48 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 20,043 பயனாளிகளுக்கு நகர்ப்புற வீட்டுமனைப் பட்டாக்கள், வீட்டுமனைப்பட்டா, ஆதிதிராவிடர் நலப் பட்டா, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, விபத்து உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 41,620 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம், முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனி நபர் கிணறு, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தனி நபர் இல்லக் கழிப்பறைகள், வீட்டுக் குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு உதவிகள்;

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 77,198 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி அளித்தல், சமுதாய முதலீட்டு நிதி, அமுத சுரபி நிதி, வட்டார வணிக வள மையம், நலிவு நிலை குறைப்பு நிதி, சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 26,487 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், கறவைமாடு பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சுய உதவிக்குழு கடன், தானிய ஈட்டுக்கடன், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் போன்ற உதவிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 12,369 பயனாளிகளுக்கு தனி நபர் வன உரிமை சான்று, பழங்குடியினர் நல வாரிய அட்டைகள், விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள்;

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 3,423 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, விபத்து நிவாரணம், வங்கிக் கடன் மானியம், காதொலிக் கருவி, தையல் இயந்திரம், திறன் பேசி, கருப்புக் கண்ணாடி, நடைபயிற்சி உபகரணங்கள், ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், பேட்டரி நாற்காலி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செயற்கை கால் ஆகிய பல்வேறு உதவிகள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 13101 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், கலைஞர் கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு பெட்டகம் போன்ற உதவிகள்;

தாட்கோ சார்பில், 3036 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம், கல்வி உதவி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டைகள், இயற்கை மரண உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி ஆகிய பல்வேறு உதவிகள்;

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 8,035 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, திரவ பெட்ரோலிய சலவைப் பெட்டி, மிதிவண்டி ஆகிய பல்வேறு உதவிகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 1,061 பயனாளிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகள், சிறுதானியங்கள், தார்பாய், பயறு விதைகள், புதர் நீக்கம், நெல் இயந்திர நடவு, நெல் விதை, இலைவழி தெளிப்பு போன்ற பல்வேறு உதவிகள் வழங்குதல்;

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 1,000 பயனாளிகளுக்கு குறைந்தவிலை வெங்காய சேமிப்புக் கிடங்கு, ஒருங்கிணைந்த பண்ணையம், நிழல்வலை கூடாரம், தனிநபர் நீர் சேகரிப்பு அமைப்பு, தேனீ பெட்டி மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவி, நிரந்தர மண்புழு உரக்கூடம், நகரும் காய்கறி தள்ளுவண்டி ஆகிய பல்வேறு உதவிகள்;

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 569 பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு, வெண்பற்றி வளர்ப்பு, மானியத்தில் புல்நறுக்கும் கருவி, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற பல்வேறு உதவிகள், ஆவின் சார்பில், 4,102 பயனாளிகளுக்கு சிறிய அளவிலான பால் பண்ணை, தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் காப்பீடு, ஒருங்கிணைந்த கால்நடை கருத்தரித்தல் திட்டம், எருமைக்கன்று வளர்ப்பு திட்டம், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெற்றி நிச்சயம் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி, அண்ணல் அம்பத்கர் பழங்குடியினர் திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வாங்க கடனுதவிகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 459 பயனாளிகளுக்கு பெற்றோர் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மாதாந்திர பராமரிப்புத் தொகை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், அன்னைதெரசா ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 1,000 பயனாளிகளுக்கு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, நல வாரிய அட்டைகள்;

எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், 893 பயனாளிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்;

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், 205 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நுன்நிதி கடனுதவிகள்;

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை - மாவட்ட தொழில் மையம் சார்பில், 277 பயனாளிகளுக்கு கலைஞரின் கைவினை திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவிகள்;

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில், 12 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின்கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள், உழவர் சந்தை அடையாள அட்டைகள்;

வேளாண் பொறியியல் துறையின் சார்பில், 20 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார் அமைக்கும் திட்டம், பயிர்சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரையில் இயந்திரமயமாக்குதல், திறந்தவெளி கிணறு புனரமைத்தல் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், 38 பயனாளிகளுக்கு வருவாய் ஈட்டும் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கான வைப்பு நிதி;

மாவட்ட வன அலுவலகம் சார்பில், 902 பயனாளிகளுக்கு காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், மண் மற்றும் ஈரப்பதப் பாதுகாப்புப் பணி, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகிய உதவிகள்;

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், 37 பயனாளிகளுக்கு மதுவிலக்கு குற்றவாளிகளில் மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித் தொகை;

மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 164 பயனாளிகளுக்கு கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன்;

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 5 பயனாளிகளுக்கு உ.கீரனூர் திட்டப்பகுதி - II இல் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை;

என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 1045 கோடியே 41 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,16,056 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories