Tamilnadu
தனியாக அழைத்து காதலியை அரிவாளால் வெட்டிய காதலன்.. ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. நடந்தது என்ன ?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ளது கல்லுத்தொட்டி என்ற கிராமம். இங்கு பெர்ஜின் ஜோஸ் என்ற 24 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அந்த பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் பி.ஏ படித்து கொண்டிருந்தபோது, மடிச்சல் காட்டுவிளையைச் சேர்ந்த டேன் நிஷா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரே கல்லூரி என்பதால் முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். அப்படி இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது நிஷா, பி.எட் படித்து வருகிறார். இந்த சூழலில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் ஜோஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை வர, ஜோஸ் கோபத்துடன் நிஷாவிடம் பேசியுள்ளார். இதனால் நிஷா அவருடன் இருந்த காதலை முறித்துக்கொள்ள எண்ணியுள்ளார். இதில் எரிச்சலடைந்த ஜோஸ், அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இப்படியே தொடர்ந்து மிரட்டல் விடுத்த நிலையில், அதனை டெலிட் செய்யுமாறு நிஷாவும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடைசியாக உன்னை பார்த்துவிட்டு உனது கண் முன்னே அனைத்தையும் டெலிட் செய்கிறேன் என்று ஜோஸ் கூறவே, அதனை நம்பிய நிஷாவும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அங்கேயும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பெரிதாக முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோஸ், தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அலறி துடித்த அவரது சத்தத்தை கேட்டு அந்த வழியே சென்றவர்கள் வந்து பார்க்கையில் அந்த பெண் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மேலும் ஆட்களை கண்டதும் அங்கிருந்து ஜோஸும் தப்பியோடியுள்ளார். தொடர்ந்து நிஷாவை மீட்டவர்கள், அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பிச்சென்ற ஜோஸ், ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து இரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை வெட்டி விட்டு, ஓடும் இரயிலின் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் கன்னியாக்குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!