இந்தியா

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

கேரளாவில் இருந்து மெக்காவுக்கு நடந்தே சென்ற இளைஞரின் செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது மாநிலத்தில் இருந்து புனித நகரமான மெக்காவிற்கு நடந்து செல்ல ஒரு வருடத்திற்கு (சுமார் 370 நாட்கள்) ஆனது. 8,640 கி.மீ தூரம் பயணித்த இந்தப் பயணம், பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத், இறுதியாக சவூதி அரேபியா வழியாகச் சென்றது. மீண்டும் வலியுறுத்துவதற்காக, அவர் கால் நடையாக பயணத்தை முடித்தார்.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை அடுத்துள்ளது வளஞ்சேரி என்ற இடம். இங்கு ஷிஹாப் சோத்தூர் என்ற 29 வயது இளைஞர் வசித்து வருகிறார். மத நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் இவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளார். எனவே சவுதி அரேபியாவில் இருக்கும் மெக்காவுக்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

ஆனால் அதனை வித்தியாசமாக செய்ய எண்ணிய இவர், நடைப்பயணமாக செல்ல விரும்பியுள்ளார். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி கேரளாவில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார். சுமார் 370 நாட்கள் தொடர்ந்து தனது நடைபயணம் மூலமே 8640 கி.மீ தூரத்தில் இருக்கும் மெக்காவை தற்போது சென்றடைந்துள்ளார்.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

தனது பயணத்தின் போது இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளை கடந்து மெக்காவுக்கு வெற்றிகரமாக சென்றுள்ளார். இதுகுறித்து ஷிஹாப், தனது youtube பக்கத்தில் update செய்து வந்துள்ளார். மேலும் இவர் பாகிஸ்தானுக்குள் நுழையும்போது விசா இல்லாததால் பாகிஸ்தானின் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !
அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

பின்னர் போக்குவரத்து விசாவைப் பெற வாகாவில் உள்ள ஒரு பள்ளியில் பல மாதங்கள் காத்திருந்து ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் விசாவை பெற்று பாகிஸ்தானுக்கும் நுழைந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய அவர், 4 மாதங்களுக்கு பிறகு தனது இலக்கை அடைந்தார். தீவிர முயற்சி, தடங்கல்கள், காலநிலை மாற்றங்கள் என தொடர்ந்து பலவற்றையும் கடந்து மெக்காவுக்கு வெற்றிகரமாக வந்துள்ளார்.

அம்மாடியோ.! கேரளா To மெக்கா.. 370 நாட்கள், 8,600 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர் - பூரிப்படையும் மக்கள் !

தற்போதுள்ள காலகட்டத்தில் பல இளைஞர்களும் ஊர் சுற்றி பார்க்க பைக்கில் ட்ராவல் செய்வது ட்ரெண்டாகி வருகிறது. இந்த சூழலில் இஸ்லாமியர்கள் தங்களது முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதும் ஹஜ் யாத்திரை பயணத்தை நடந்தே மேற்கொண்டுள்ள இந்த இளைஞருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories