Tamilnadu
டாஸ்மாக் கடையில் 3.50 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி திருடர்கள்.. போலிஸ் தீவிர விசாரணை !
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வல்லபாடி தபால் மேடு என்னும் இடத்தில அரசு டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்த கடையில் கல்லாவியை எடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (வயது 48) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த கடையில் நேற்று ஞாயிறுகிழமை என்பதால் விற்பனை அதிகமாக நடைபெற்றுவந்த நிலையில் , இரவு திடீரென மர்ம நபர்கள் முகமூடி அணிந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து திடீரென கடையில் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
உள்ளே நுழைந்தவர்கள் மாதேஷின் கழுத்தில் கத்தியை வைத்து அவரை மிரட்டி கடையில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் 3 செல்போனை பறித்துள்ளார். பின்னர் மாட்டிக்கொள்ள கூடாது என கடையில் இருந்த சிசிடிவியை உடைத்து காட்சிகள் பதிவாகியுள்ள ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக மாதேஷ் பர்கூர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அருகில் இருந்த சிசிடிவி. காமிராவை வைத்து கொள்ளையர்கள் திட்டம் தீட்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து தனிப்படை அமைந்துள்ள போலிஸார் கிடைத்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர் என போலிஸார் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!