Tamilnadu
“தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்..” - அமைச்சர் நாசர் பேட்டி !
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் குறைவான அளவு விநியோகம் செய்வதாக வந்த புகார்களை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பால் விநியோகம் குறைந்துள்ளது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்கப்பட்டது. ஏன் குறைவான அளவில் பால் கிடைப்பது குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பால் விநியோகத்தில் மக்களுக்கு எந்த ஒரு குறைபாடும் இல்லாத வகையில் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளகளை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தக் காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.
ஒரு சில இடங்களில் போக்குவரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் விநியோகம் காலதாமதம் ஏற்பட்டது. அதுவும் சரிசெய்யப்பட்டது. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் விநியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல். நாளை முதல் முறையாக ஆவின் பால் விநியோகம் நடைபெறும். கோடைகாலம் வரவுள்ளதால் ஆவினில் கூடுதலான விதவிதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன.
பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. லாபம் மட்டும் நோக்கம் அல்ல. பால் விநியோகத்தில் எந்தவிதமான சமரசம் செய்யாமல் முறையாக பொது மக்களுக்கு பால் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது." என்று தெரிவித்தார்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!