Tamilnadu
மனைவி இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து கணவன் உயிரிழப்பு .. இறப்பிலும் பிரியாத தம்பதி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கூலித் தொழிலாளியான கலியபெருமாள். இவரது மனைவி சின்னம்மாள். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி சின்னம்மாள் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரின் இறுதிச் சடங்குகளை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவர் கலியபெருமாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பிறகு அவரை உறவினர்கள் எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் கடைசி வரை எழுந்திருக்கவில்லை. பின்னர்தான் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரின் சடலத்தையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதனையடுத்து கணவன் , மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”எதற்கும் நிதி வழங்காத ஒன்றிய அரசு” : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!
-
பகுத்தறிவு கொண்ட உலக குடிமக்களாக வளர்த்தெடுப்பேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!
-
100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசு : வென்று காட்டும் உதயநிதி!
-
BB வீட்டிற்குள் Rank Task : சிறைக்கு செல்லும் FJ, பாரு மற்றும் திவாகர் : பாரபட்சம் பார்க்கும் கனி!
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR): Online மூலம் படிவங்களை பூர்த்தி செய்வது எப்படி? -விவரம்