வைரல்

5 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 .. கடையில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்: கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் சிறுவன் வாங்கிய 5 ரூபாய் தின்பண்டம் வாங்கிய பாக்கெட்டில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5  ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 .. கடையில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்: கர்நாடகாவில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரு மாவட்டத்திற்கு உட்பட்ட உண்ணூரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் சிப்ஸ் மற்றும் குர்குரே போன்று பேக் செய்யப்பட்ட, Flings மற்றும் Dum Biryani என்ற தின்பண்டங்கள் விற்கப்பட்டு வருகிறது. இதைக் குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கிராமத்தில் ரூ.2 லிருந்து ரூ.10 வரை விற்பனையாகும் இந்த தின்பண்டங்களை வாங்கினால் அதனுள் ரூ. 500 பணம் இருக்கிறது என்ற தகவல் பரவியுள்ளது. இதனால் கிராம மக்கள் அனைவரும் அந்த தின்பண்டங்களை வாங்கி குவித்துள்ளனர்.

5  ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 .. கடையில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்: கர்நாடகாவில் பரபரப்பு!

இதன் காரணமாக கடைகளிலிருந்த அனைத்து தின்பண்டங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. மேலும் இதை வாங்கிய சிலருக்கு ரூ.500 பணமும் கிடைத்துள்ளது. அதேபோல் ஒரு குடும்பத்தில் இப்படி தின்பண்டம் வாங்கியவர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.12.500 வரை கிடைத்துள்ளது.

இதனால் கிராம மக்கள் மீண்டும் மீண்டும் அந்த தின்பண்டத்தை வாங்க கடைகளுக்கு வந்து செல்கின்றனர். மூன்று நாட்களில் அனைத்து கடைகளிலும் அந்த தின்பண்டம் காலியாகி உள்ளது.

5  ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 .. கடையில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்: கர்நாடகாவில் பரபரப்பு!

மேலும், பாக்கெட்டுகள் இருந்த ரூ. 500 நோட்டுகள் போலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவை போலி நோட்டுகள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5-6 நாட்களில் மட்டும் எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என அனைவரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணத்தை தின்பண்டம் பாக்கெட்டில் யார் வைத்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories