Tamilnadu
தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்பனை - இந்து முன்னணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது : போலிஸ் அதிரடி!
சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று அம்மாபேட்டை காவல் நிலைய போலிஸார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தபோது, கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்யும் ஸ்ரீதர் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 9 கிலோ அளவில் இருந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை, இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிகரெட் வியாபாரி ஸ்ரீதர் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையில் சேலம் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!