தமிழ்நாடு

“வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு.. ₹17,696 கோடியை எட்டிய தமிழ்நாடு” : “The Hindu” நாளேடு தகவல்!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 41.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது என்று “தி இந்து” ஆங்கில நாளேடு தனது சிறப்புச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

“வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு.. ₹17,696 கோடியை எட்டிய தமிழ்நாடு” : “The Hindu” நாளேடு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 41.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது என்று “தி இந்து” ஆங்கிலநாளேடு தனது சிறப்புச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து “தி இந்து’’ஆங்கில நாளேட்டின் நேற்றைய (28.3.2022) இதழில் “தமிழ் நாட்டுக்குள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரத்து 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்ற தலைப்பிலும் இதில் “53 சதவீதம் 2021-22ஆம் நிதி யாண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் வந்துள்ளது’’ என்ற துணைத் தலைப்பிலும் சஞ்சய் விஜயகுமார் எழுதியுள்ளசிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

41.5% வளர்ச்சியடைந்து 17,696 கோடியை எட்டியுள்ளது!

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 17,696 கோடியை எட்டியுள்ளது. (சுமார் 2.4 பில்லியன் டாலர்) ரூ.12,504 கோடி (சுமார் 1.7 பில்லியன் டாலர்) ஆக 2020ஆம் ஆண்டு இதேகாலத்தில் (கொரோனா - கோவிட் 19) முதல் அலை தொடங்கிய காலத்தில் இருந்த நிலையில் இருந்து இது வளர்ந்துள்ளது.

இதில் 53 சதவீதம் அல்லது ரூ.9,332 கோடி, 2021 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 2021- 2022 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு காலத் தில் வந்துள்ளது. ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புள்ளி விபரங்களின்படி, இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்தது.

இதில் தமிழ்நாட்டின் பங்கு, ஐந்தாவது மிக உயர்ந்த பங்காக இருந்தது. இதில் மகாராஷ்டிரா (26சதவிகிதம்), கர்நாடகா (23சதவிகிதம்) குஜராத் (21 சதவிகிதம்) மற்றும் டெல்லி (13 சதவிகிதம்) ஆகியவற்றின் பின்னால் இருந்தது. 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த மாநிலம் ரூ.8,324 கோடி வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்திழுத்தது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 16 சதவீதம் ஆக ரூ.3,19,976 கோடி வீழ்ச்சிய டைந்த போதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது ஆண்டு நாட்காட்டியின்படி, 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சாம் பிரகாஷால் சமீபத்தில் மக்களவையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின் படி, தமிழ்நாடு 3.02 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 2021 நாட்காட்டி ஆண்டில் கவர்ந்தி ழுத்துள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடு வர்த்தக முடிவுகளை எடுப்ப தற்கு ஒரு பிரச்சினையாகும். மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடுவரத்து இயற்கை வளங்கள், சந்தையின் அளவு, உள்கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொது முதலீட்டு வானிலை அதே போன்று, உலகப் பொருளாதாரத் தன்மை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவுகளையும் பொறுத்தது.

2021ஆம் நாட்காட்டி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு வரத்து 2020ஆம் நாட்காட்டி ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைந்தது என்று அவர் தமது எழுத்து மூலமான பதிலில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டுக்கான ஆலோசனை முகமையான தமிழ்நாட்டு வழிகாட்டி அமைப் பின் தலைமை நிர்வாகியும் மேலாண்மை இயக்கு நருமான பூஜாகுல்கர்னி “தி இந்து’’ ஏட்டிடம், குறிப்பிடத்தக்க அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய முக்கியத் துறைகள், கட்டுமானம், நிதி சேவைகள், உற்பத்தி (ஆட்டோ, எலக்ட் ரானிக்ஸ், சாதனங்கள்) சில்லறை மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைகள் ஆகியவையாகும் என்று தெரிவித்திருந் தார்.

மும்பை மற்றும் டெல்லி ஏராளமான பன்னாட்டு நிறுவன அலுவலகங்களைப் பெற்றுள் ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அதன் விளைவாக, வெளிநாட்டு நேரடி முதலீடு தமிழ்நாடு போன்ற பிற மாநிலங் களுக்கு வருவது மும்பையிலும், டெல்லியிலும் கணக்கில்வைக் கப்படுகின்றன.

தமிழ்நாட்டை அதிகமாகப்பாதித்துள்ளது!

குல்கர்னி மேலும் கூறுகை யில், வெளிநாட்டு நேரடி முதலீடு உற்பத்தித்துறையில் செய்யப்படுவது தொற்று தாக்குதல் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டை அதிகமாகப் பாதித்தது. அவரைப் பொறுத்தவரை, வழிகாட்டி அமைப்பு நாடு களுக்கு நங்கூரமான வாடிக்கையாளர் களை பல்வேறு துறைகளுக்கு கவர்ந் திழுப்பதற்கான தனிப்பட்ட அமைப்புகளை அமைப்பது உள்பட பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டது. இது தொழில் இணைப்புகளில் இறக்கத்தையும், மேம்பாட்டில் உயர்வையும் ஏற்படுத்த உதவி யுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேடுகளில் உள்ள முதலீட் டாளர்களிடம், கடந்த 10 மாதங் களில் மட்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்த போதிலும் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8 பில்லியன் டாலர் அளவுக்கான முதலீடுகளை உருவாக்கும் 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று கூறியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories