Tamilnadu

SELFIE மோகம்.. நீச்சல் தெரியாமல் நீருக்குள் நின்று போட்டோ எடுத்த பள்ளி மாணவன்.. பரிதாபமாக உயிரிழப்பு !

சென்னை, குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). கார் மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவரும், அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட்ஸ் (வயது 16) என்ற 12-ம் வகுப்பு மாணவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் ஊர் சுற்றுவதற்காக இரு சக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது ஏரிக்குள் இறங்கி இருவரும் தனித்தனியே 'செல்ஃபி' எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி, மேலே வர முடியாமல் துடித்தனர்.

அப்போது இவர்கள் தண்ணீரில் இருந்து கொடுத்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது இளைஞர்கள் தத்தளிப்பதை கண்டு காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் மதகின் அருகில் நீரில் சிக்கியிருந்ததால் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. எனவே தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் தகவலறிந்து நீரில் சிக்கியிருந்த இளைஞர்களை மீட்க தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இளைஞர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே ஏரியில் பள்ளி மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் செல்பி ஆசையில் தங்களுக்கு நேரும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் சிலர் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுப்பாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!