இந்தியா

காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

கர்நாடகாவில் காவல்நிலையத்திலேயே போலிஸார் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்திற்குப்பட்டது கவுலிப்பள்ளி காவல் நிலையம். இந்த காவல்நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த மூன்று போலிஸார் மேசை மீது இருந்து புகார் கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடிக்கி வைத்துள்ளனர்.

பின்னர் மூன்று போலிஸார் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இவர்களே தங்கள் மது குடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும் காவல்நிலையத்தில் மது குடித்த மூன்று போலிஸார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குற்றங்களைத் தடுக்கும் போலிஸாரே குற்றச் செயலில் ஈடுபடுவது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்குக் கர்நாடகா போலிஸாரி இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories