Tamilnadu
பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லாதது.. கலக்கத்தில் EPS : OPS தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு !
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.
அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்த உத்தரவில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!