
தமிழ்நாட்டில் பொதுவாக மக்களையே சந்திக்க முன்வராத ஒருவர், அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட மொத்தம் உள்ள 38 மாவட்டங்களை எட்டிப்பார்க்காத ஒருவர், தனது திரைக் கவர்ச்சியால் ஆட்சியைப் பிடித்தது அவருக்கே அதிசயம்தான்.
அப்படிப்பட்டவர், சுறா படத்தில் நடத்ததால் மீனவர்களின் காவலனாகவும், “விவசாயத்தை விட்டுடாதீங்க” என வசனம் பேசியதால் உழவர்களுக்கு உறுதுணையாகவும் இருப்பார் என்று நினைத்தால், அது இல்லை! என்பதை கடந்த 4 மாத ஆட்சிக் காலத்தில் உறுதி செய்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
அதுபோலவே, அண்ணன் தங்கை பாசம் காட்டி, ஆட்சியைப் பிடித்த நடிகர் விஜய், உண்மையில் மக்களை தம்பி, தங்கைகளாக பார்க்கிறாரா? என்ற கேள்வியையும் அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எழுப்பி வருகின்றன.
குறிப்பாக, கடந்த ஜூலை மாதம், முதலமைச்சர் விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு ஆய்வுக்காக சென்றபோது, அங்கிருந்த பெண் ஒருவர் கைக்கொடுக்க வந்தவுடன், அதனை வேண்டும் என்றே தவிர்த்தக் காட்சி இன்றளவும் இணையத்தை சுற்றி வரும் நிலையில்;

இன்று (செப்.22) சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று ரீல்ஸ் கண்டெண்ட் தேடச் சென்ற முதலமைச்சர் விஜய்யிடம், கைக்கொடுக்க பெண்கள் முற்பட்டபோது, பதற்றமடைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார் விஜய்.
இதனால், “லண்டன் சென்று சக நடிகரையும், அவரது ரசிகர்களையும் தன்வசம் ஈர்க்க, முத்தம் கொடுக்கத் தயங்காத முதலமைச்சர் விஜய், சாமானிய மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயங்குவது ஏன்?” என்பதான கேள்விகள் பரவலாக எழுந்து வருகின்றன.

மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு இடையில், ஆனால் ஒரு அடி இடைவெளியில் உட்கார்ந்து அவர் உணவு அருந்தும் காட்சிகள், மக்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
செல்வந்தர்களை அரவணைக்க மனம் இருக்கும் முதலமைச்சருக்கு, எளியவர்களை அரவணைக்க மனமில்லையா? என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளையில், இது அவர் நடிகராக இருந்த காலத்தில் இருந்து தொடர்வதுதான். அப்போதே ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டால் ஓடத்தான் செய்வார் என்பதான கருத்துகளும் இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.






