விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை அணியுடனான இறுதிப்போட்டியில் வென்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாச, ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

217 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் கேப்டன் சமரி 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்திய அணியின் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஷஃபாலி வர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி ஆட்டமும், ரிச்சா கோஷின் இறுதிக்கட்ட அதிரடியும், பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

banner

Related Stories

Related Stories