Tamilnadu
காதலிப்பதாக மாணவியை ஏமாற்றிய இளைஞர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் சுமதி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் . தனது உறவினரான திசையன் விளையைச் சேர்ந்த துரை மகன் வேம்பு ராஜா.
இவர் தனது உறவினரான சுமதியை அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. இதனால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையடுத்து வேம்பு ராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுக்குத் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த சுமதி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வேம்பு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி இளைஞர் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!