Tamilnadu
போலி டிக்கேட் மூலம் ஏர்போர்ட்டில் நுழைந்த கணவர்.. மனைவியை வழியனுப்ப வந்த இடத்தில் நடந்த விபரீதம்!
விருதுநகா் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (43). இவா் கனடா நாட்டு குடியுறிமை பெற்று, அந்த நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். சசிகுமாா் நேற்று மாலை 6 மணியளவில் சென்னை சா்வதேச விமானநிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்தாா். அவர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் செல்வதற்கான விமான டிக்கேட் வைத்திருந்தாா்.
அந்த டிக்கேட்டை காட்டி, பயணிபோல் விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்தாா். அதன் பின் இரவு 9 மணி அளவில் புறப்பாடு பகுதி வழியாக வெளியே செல்ல வந்தாா். அங்கு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படை வீரர், சசிகுமாரை நிறுத்தி விசாரித்தாா். நான் துபாய் செல்வதற்கு வந்தேன். ஆனால் தற்போது பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே வெளியில் செல்கிறேன் என்று கூறினார்.
ஆனால் அவா் வைத்திருந்த விமான டிக்கேட்டில் “ஆப் லோடு” என்ற சீல் எதுவும் இல்லை. இதனால் சசிகுமாா் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியில் விடாமல், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். உயா் அதிகாரிகள் விசாரித்தபோது சரியான பதில் அளிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக மாற்றி, மாற்றி பேசினாா். இதையடுத்து சசிகுமாரை சென்னை விமான நிலைய போலிஸில் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலைய போலிஸார் அவரை தீவிரமாக விசாரணை நடத்திய போது, அவரிடமிருந்தது போலி விமான டிக்கேட் என்று தெரியவந்தது. இவர் மனைவி வெளிநாடு செல்வதால், அவரை வழியனுப்ப விமானநிலையம் வந்துள்ளாா். ஆனால் சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை. எனவே சசிகுமாா் போலியான விமான டிக்கேட் தயாரித்து பயணி போல் நடித்து விமானநிலையத்திற்குள் சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமானநிலைய போலிஸார், சசிகுமாரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினா். அதன்பின்பு அவா் மீது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள், போலி ஆவணத்தை காட்டி, அத்துமீறி உள்ளே புகுந்தது உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். அதோடு போலிஸார் அவரை கைது செய்தனா். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமானநிலையம் பாதுகாப்பு மிகுந்தது. அந்த பாதுகாப்புகளையும் மீறி, போலி விமான டிக்கேட்டை காட்டி ஒருவா் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்குள் நுழைந்து, 3 மணி நேரத்திற்கு பின்பு, மீண்டும் வெளியே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!