தமிழ்நாடு

“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது” : தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி பேட்டி!

“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது” என தமிழ் மொழி பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தெரிவித்துள்ளார்.

“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது” : தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது” : தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி பேட்டி!

மேலும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சார்ந்த காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆறுமுக நெறி தலைமை காவல்துறையில் பணியாற்றும் செல்வ குமாரின் மகள் மாணவி துர்கா, தமிழ் மொழி பாடத்தில் தமிழகத்தில்லையே 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து, மாணவி துர்க்கா கூறியதாவது, பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது. ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைப்பதன் மூலம் போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்யமுடியும்.

“பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது” : தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி பேட்டி!

மேலும் தனது பள்ளியில், ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டாய படுத்தியதில்லை. தமிழ் பாடங்களை படிப்பதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். வேளாண் துறை சார்ந்த படிப்புகளை படிப்பதற்கு ஆர்வம் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories