Tamilnadu
“மகளிர் உதவித்தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய தகவல்!
தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தேனி அல்லிநகரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இன்னும் ஓராண்டில் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பின், நகராட்சி, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் 5,000 பணியிடங்கள் 6 மாதங்களில் எவ்வித இடையூறும் இன்றி தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படும்.
சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு அனைவரும் வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் படி, கட்டாயம் நிதி உதவித்தொகை வழங்கப்படும். மேலும் அ.தி.மு.க. தலைமை இல்லாத கட்சி. அந்தக் கட்சி இனி காணாமல் போய்விடும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!