Tamilnadu
மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்த 17 வயது சிறுமி.. 15 சவரன் நகை திருட்டு: பகீர் காரணம்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. மூதாட்டியான இவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது மகன்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
இதனால் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டிற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து பார்த்போது மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவரது மகன்களுக்கும், போலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி ஒருவர் நாகலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்து பதிவாகியிருந்தது. இதையடுத்து போலிஸார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அச்சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி மூதாட்டி நாகலட்சுமியை கொலை செய்து அவரின் 15 சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்கு 17 வயதுதான் ஆவதால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 15 சவரன் நகையையும் போலிஸார் மீட்டுள்ளனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!