தமிழ்நாடு

’நீ என்ன போலிஸா?’.. ரோந்து வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: 2 பேரை கம்பி எண்ண வைத்த போலிஸ்!

ரோந்து வாகன ஓட்டுநர்களை மிரட்டிய 2 பேரை போலிஸார் கைது செய்தனர்.

’நீ என்ன போலிஸா?’.. ரோந்து வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: 2 பேரை கம்பி எண்ண வைத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சரண்ராஜ். இவர் நேற்று இரவு சித்ரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது நித்யா என்ற பெண், ஆட்டோ ஓட்டி வந்த ஒரு நபர் தன் மீது வேண்டும் என்ற மோதுவதாக வந்ததாக அவரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சரண் ராஜ் அந்த ஆட்டோவை மடக்கி பிடித்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுர், நீ என்ன போலிஸா? என்ன பிடிக்க என ஆவேசமாக சரண்ராஜிடம் பேசியுள்ளார். மேலும், எங்க ஏரியாவிலேயே வந்து கெத்து காட்டுறீங்களா? என ஆபாசமாக பேசியபடி ஆட்டோ ஓட்டுநரும், உடன் இருந்த மற்றொருவரும் சரண்ராஜை தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சரண்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை செய்தபோது, ரோந்து வாகன ஓட்டுநராக தாக்கியது ஆட்டோ ஓட்டுர் ஜயப்பன், மற்றும் விஜி என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்தபோலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories