தமிழ்நாடு

மெக்கானிக் ஷாப்புக்கு செல்லும் போது நடந்த விபரீதம்.. நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கானிக் ஷாப்புக்கு செல்லும் போது நடந்த விபரீதம்.. நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அம்பாசிடர் கார் ஒன்றை பழுது பார்ப்பதற்காக வாலிகண்டபுரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது, கார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியைடைந்த செந்தில் உடனே காரி விட்டு கீழே இறங்கினார்.

பிறகு சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இது குறித்து போலிஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றும் கூடுவாஞ்சேரி அருகே தீப்பிடித்து ஏரிந்துள்ளது. இந்த கார் தீ பிடித்த உடனே இதில் இருந்த மூன்று பேரும் வெளிய வந்ததால் உயிர் தப்பியுள்ளனர்.

தற்போது கோடை காலம் என்பது வாகனங்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே வாகனங்களில் பெட்ரோல் டேங்கரில் எரிபொருளை முழுமையாக நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories