Tamilnadu
மகன் கையால் முடிந்த தந்தையின் வாழ்க்கை : குடிபோதையால் நடந்த கொடூர சம்பவம் !
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பிரகாஷ், நித்தியானந்தம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் நித்தியானந்தம் தினமும் குடித்து வந்துள்ளார். இதனால், தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம்போல் மகன் நித்தியானந்தம் குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நித்தியானந்தம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தை செல்வத்தின் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ரத்த வெள்ளத்திலிருந்த அவரை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் செல்வம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!