Tamilnadu

வெளிநாட்டிற்குக் கடத்த இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள்: அதிரடி காட்டிய சென்னை போலிஸ்!

சென்னை அடுத்த புழல் - அம்பத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான லாரிகள், கண்டெய்னர்கள் நிறுத்தும் யார்டு உள்ளது. இங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலிஸார் அதிடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட லாரியில் 5 டன் எடை கொண்ட செம்மரக்கடைகள் இருந்தது.

பின்னர் இந்த செம்மரக்கடைகளை போலிஸார் பறிமுதல் செய்து இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரிந்தது.

மேலும், கப்பல் வழியாக இந்த செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்தவும் திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து லாரியின் ஓட்டுநர், அதன் உரிமையாளர், யார்டு உரிமையாளரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “14 மணி நேரம் கடும் குளிரில் உண்ண உணவின்றி அவதிப்பட்டோம்” : நாடு திரும்பிய தமிழக மாணவர் அதிர்ச்சி தகவல்!