தமிழ்நாடு

“14 மணி நேரம் கடும் குளிரில் உண்ண உணவின்றி அவதிப்பட்டோம்” : நாடு திரும்பிய தமிழக மாணவர் அதிர்ச்சி தகவல்!

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்ப பல்வேறு உதவிகளை செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் அங்கிருந்து தர்மபுரிக்குதிரும்பி வந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“14 மணி நேரம் கடும் குளிரில் உண்ண உணவின்றி அவதிப்பட்டோம்” : நாடு திரும்பிய தமிழக மாணவர் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தர்மபுரி அடுத்த எரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சண்முகம் - சாந்தி தம்பதியினரின் மகன் கௌரி சங்கர். இவர்உக்ரைனில் (vinnytsia National medical universiy) இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுஉள்ளதால் இந்தியாவிலிருந்து மருத்துவம் படிக்கச் சென்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர் இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் உதவியால் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் எரப்பட்டி பகுதியை சேர்ந்த கௌரிசங்கர் உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வந்து அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் நேற்று சென்னை வந்தார் அங்கிருந்து இன்று காலை தர்மபுரி வந்தடைந்தார்.

அதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் போரின் காரணமாக அங்கு பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு அவதியுற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 5 நாட்கள் அங்கிருந்த பதுங்குகுழியில் பதுங்கி இருந்தோம். அதனை அடுத்து கடந்த இருபத்தி எட்டாம் தேதி உக்ரைனில் எல்லைப்பகுதியில் சுமார் 14 மணி நேரம் கடும் குளிரில் உண்ண உணவின்றி அனைவரும் அவதிப்பட்டோம்.

பின்னர் அங்கிருந்த பல்கலைக்கழகம் மூலம் ருமேனியா வந்து, இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு வந்தோம். அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் சென்னைக்கு விமானத்தில் இலவசமாக நேற்றிரவு வந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் திரும்ப தமிழக முதல்வரும் தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்ததாகவும் அதற்கு தன் சார்பாகவும் தன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், என்னைப் போல இன்னும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உக்ரேனில் தாயகம் திரும்ப இயலாமல் அவதிப்பட்டு வருவதாகவும், அவர்களையும் விரைவில் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் இந்தப் போராள்தங்களது மருத்துவப் படிப்பு தடைபட்டு உள்ளதாகவும் தொடர்ந்து தங்களது மருத்துவபடிப்பு தமிழகத்திலேயே தொடர் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.

banner

Related Stories

Related Stories