Tamilnadu

“அங்கயாவது சிக்னல் கிடைக்குதானு பார்ப்போம்” : செல்போன் டவரில் ஏறிய நபரால் கரூரில் பரபரப்பு!

கரூரில் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக செல்போன் கோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் சின்னஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்புக்கடையில் வேலை செய்து வருபவர் இளங்கோ (34). புத்தாண்டு தினமான இன்று அவர் மது அருந்தியுள்ளார்.

பின்னர் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்று காரணத்திற்காக அவர் வேலை செய்துவரும் கடையின் அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அவது செல்போனிற்கு சிக்னல் கிடைக்கிறதா என சோதனை செய்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுமார் ஒரு மணி நேரம் இளங்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திடீரென்று மழை பெய்யத் துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறிய நபர் கீழே இறங்கினார். தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இளைஞர் செல்போன் கம்பத்தில் ஏறிய சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Also Read: “செலவுக்கு பணம் தரவில்லை..” : நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - விசாரணையில் ‘பகீர்’!